NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆசியாவின் பிரபல பாடகி கோகோ லீ காலமானார்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஹொங்காங்கின் பிரபல பாடகி கோகோ லீ தனது 48ஆவது வயதில் காலமனார்.

மெண்டரின் மொழியில் டிஸ்னியின் முலானின் குரலாகவும், அவரது உயர்ந்த குரல்களுக்காகவும் ஆசியா முழுவதும் பிரபலமானவர்.

சமீபத்திய ஆண்டுகளாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த சில நாட்களாக உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் இருந்ததாக அவரின் மூத்த சகோதரிகள் கரோல் மற்றும் நான்சி ஆகியோர் இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்று (05) உயிரிழந்ததாக அவரது சகோதரிகள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இசைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் அவரது மறைவுக்கு தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Share:

Related Articles