NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் 35 பேர் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதி..!

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 35 ஊழியர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (19) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

ஊழியர்கள் ஆடை தொழிற்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்ட பின்னர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு திடீரென சுகயீனமுற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சுகயீனமுற்ற ஊழியர்களில் 35 பேர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையிலும், 6 பேர் சீதுவ விஜய குமாரதுங்க வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

Share:

Related Articles