NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆடைகளை உலரவைத்தால் அபராதம் !

பல்கனியில் ஆடைகளை உலர்த்தினாலோ அல்லது வீட்டுப் பொருட்களை அலட்சியமாக வைத்திருந்தாலோ கட்டிட உரிமையாளருக்கு 200 ரியால் முதல் 1000 ரியால் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சவூதி அரேபிய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கட்டிடத்தின் அழகு பாதிக்கப்படும் வகையில் பல்கனிகளில் ஹங்கர் அல்லது பிற பொருட்களை வைக்க வேண்டாம் என்றும் அத்துடன் 20 நாட்களுக்கு மேல் பயன்படுத்தப்படாத வாகனத்தை வீதியில் நிறுத்தி வைக்க வேண்டாம் எனவும், அவ்வாறு வைத்தால் 500 ரியால் அபராதம் விதிக்கப்படும் என்றும் சவூதி அரேபிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles