NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் வெடிகுண்டு மிரட்டல்!

ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தரான முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானியின் திருமண விழா மும்பையில் நடைபெற்றது.

குறித்த திருமண நிகழ்வில் உலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்தத் திருமண நிகழ்விற்கு நபர் ஒருவரினால் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த நபர் அம்பானியின் திருமண விழாவில் வெடிகுண்டு வீசப்படும் என எச்சரித்துச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

அதனடிப்படையில் அச்சுறுத்தல் விடுத்த சந்தேகநபர் மும்பை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share:

Related Articles