NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆப்கானிஸ்தான் அணிக்கு இமாலய இலக்கு…!

ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தற்பொழுது நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 308 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பாக  Charith Asalanka ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்களையும், Kusal Mendis 61 ஓட்டங்களையும்,  Sadeera Samarawickrama 52 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக Azmatullah Omarzai 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு 309 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles