NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆப்கானை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்!

ஆப்கான் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டியில் 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி 3 – 0 என்ற அடிப்படையில் தொடரை கைப்பற்றியுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று (26) இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட தீரமானித்தது.

அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 268 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில், 269 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 48.4 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 209 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

Share:

Related Articles