2023 ஆம் ஆண்டுக்கான ஆப்பிள் மியூசிக் விருது அமெரிக்காவை சேர்ந்த இசை கலைஞர் டெய்லர் ஸ்விஃப்ட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் ஆப்பிள் மியூசிக்கில் நாள்தோறும் அதிகமாக கேட்கப்பட்ட 100 பாடல்கள் பட்டியலில் டெய்லர் ஸ்விஃப்ட்டின் 65 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பில் டெய்லர் ஸ்விஃப்ட் தெரிவிக்கையில்,
‘நான் ஆப்பிள் மியூசிக்கின் இந்த ஆண்டுக்கான கலைஞராக தேர்வு செய்யப்பட்டதற்கு பெருமிதம் கொள்கிறேன். இந்த ஆண்டை நம்பமுடியாததாகவும், மகிழ்ச்சிக்குரியதாகவும், கொண்டாட்டமாகவும் மாற்றிய உங்கள் எல்லோருக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.