NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆறு மீனவர்களுடன் இரண்டு இலங்கை மீன்பிடி படகுகள் மாயம்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

ஆறு இலங்கை மீனவர்களை ஏற்றிச் சென்ற இரண்டு மீன்பிடி படகுகள் காணாமல் போயுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 7ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகங்களில் இருந்து இந்த படகுகள் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட பல நாள் மீன்பிடி படகில் நான்கு மீனவர்கள் இருந்ததாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார். 

இதேவேளை, ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட ஒரு நாள் மீன்பிடி படகில் இரண்டு மீனவர்கள் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன மீனவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

கடற்படையினர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், படகுகள் மற்றும் அவற்றின் பணியாளர்களைக் கண்டறிய தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles