NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆற்றில் விழுந்து உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் சடலம் 7 நாட்களுக்குப் பின்னர் மீட்பு!

கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆற்றில் விழுந்து உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் சடலம் தெஹிவளை ஓபன் பிளேஸ் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா பாலத்திலிருந்து களனி ஆற்றில் விழுந்து உயிரிழந்த குறித்த பொலிஸ் அதிகாரியின் சடலம் 7 நாட்களுக்குப் பின்னர் நேற்று (06) கண்டெடுக்கப்பட்டதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அதிகாரி பொரலஸ்கமுவ, திவுல்பிட்டியவில் வசிக்கும் நபர் எனவும், பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் கடமையாற்றுபவர் எனவும் கூறப்படுகிறது.

குறித்த அதிகாரி கடந்த 29ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சடலம் அவரது மனைவியினால் அடையாளம் காணப்பட்டதையடுத்து, களுபோவில போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தெஹிவளை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகரின் பணிப்புரையின் பேரில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.

Share:

Related Articles