NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆற்று நீரில் உப்பு கலக்கும் அபாயம்!

ஆற்று நீரில் உப்பு கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

நிலவும் வெப்பமான காலநிலையினால் மாத்தறை நில்வளா ஆற்றின் நீர்மட்டம் குறைந்து வருவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நில்வளா ஆற்றில் கட்டப்பட்டிருந்த உப்புத் தடுப்புகள் விவசாய அமைப்புகளின் எதிர்ப்பினால் ஓரளவு அகற்றப்பட்டதையடுத்து இந்நிலை தோன்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், நில்வளா ஆற்றில் கலக்கும் உப்புகள் அதிகரித்தால், சுத்திகரிப்புக்காக பெறப்படும் தண்ணீரில் உப்பு கலக்கும் வாய்ப்பு உள்ளதாக நீர்வள வாரிய அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் வறண்ட காலநிலை தொடரும் பட்சத்தில், அதனால் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து திட்டமிடப்பட்டு வருவதாக நீரியல்வள சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Share:

Related Articles