NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆளுநர் – விஜய் சந்திப்பு!

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழக பெண்களுக்கு தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டார்.

இதையடுத்து, நண்பகல் 12.45 மணியளவில் ஆளுநர் R.N. ரவியை விஜய் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, அண்ணா பல்கலை கழக சம்பவம் மட்டும் அல்லாமல் பிற விவகாரங்கள் குறித்து மனுவாக ஆளுநரிடம் விஜய் அளித்துள்ளார். சுமார் 10 நிமிடங்களே இச்சந்திப்பானது நடைபெற்றுள்ளது.

விஜய் அளித்த மனுவில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும். Fengal புயலுக்கான நிவாரண தொகை முழுமையாக கிடைக்கவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்துள்ளார்.

இதனிடையே, கோரிக்கைகளை கேட்ட ஆளுநர் அவற்றை பரிசீலிப்பதாக கூறியதாக தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles