NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இங்கிலாந்து தொடருக்கான நியூசிலாந்து ஒருநாள் குழாம் அறிவிப்பு!

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து குழாத்தில் கெயல் ஜெமிஸன் மற்றும் டிரெண்ட் போல்ட் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவில் ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ணத்தொடருக்கு முன்னதாக நடைபெறவுள்ள முக்கியமான தொடராக இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் அமைந்துள்ளது. 

நியூசிலாந்து அணிக்காக 99 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள டிரெண்ட் போல்ட் கடந்த இரண்டு 50 ஓவர்கள் உலகக்கிண்ணத்தில் நியூசிலாந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்ததுடன், அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது. 

டிரெண்ட் போல்ட் அணியில் இணைக்கப்பட்டுள்ள அதேநேரம் முதுகுப்பகுதியில் உபாதைக்கு முகங்கொடுத்திருந்த கெயல் ஜெமிஸன் உபாதையிலிருந்து குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். எனினும் உபாதையிலிருந்து குணமடைந்துவரும் மைக்கல் பிரேஸ்வல் அணியில் இடம்பெறவில்லை. 

இவருடன் ஜிம்மி நீசம் மற்றும் மார்க் செப்மன் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக அணியில் இணையவில்லை என்பதுடன், இஸ் சோதி இங்கிலாந்து அணிக்கு எதிரான T20I தொடரின் பின்னர் நாடு திரும்பவுள்ளார். 

Share:

Related Articles