இந்தியாவின் – ராஜஸ்தான் மாநிலத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் இடது சிறுநீரகத்திற்குப் பதிலாக வலது பக்க உள்ள சிறுநீரகம் அகற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ராஜஸ்தானைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவர், சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரது இடது பக்கம் உள்ள சிறுநீரகத்திற்குப் பதிலாக வலது பக்கமாக உள்ள சிறுநீரகம் அகற்றப்பட்டுள்ளது.
இதனால் குறித்தப் பெண்ணின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்த நிலையில் ஜெய்பூரில் உள்ள அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், தவறான முறையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட தனியார் மருத்துவமனைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.