NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இணையத்தில் வைரலாகி வியாபாரியாகியவர் மீண்டும் வைரல் !

பல கோடி பணம் படைத்தவர்களின் வீடியோ முதல் எளிய மனிதர்களின் வீடியோ வரை இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், கடந்த 2016 ஆம் ஆண்டு நீல நிற கண்களை கொண்ட பாகிஸ்தானை சேர்ந்த டீ விற்பனையாளர் ஒருவர் அவரது நீல நிற கண்களுக்காகவே இணையத்தில் வைரலானார்.

அர்ஷத் கான் என்கிற பெயர் கொண்ட இந்த டீ விற்பனையாளரை 2016 ஆம் ஆண்டு ஜியா அலி என்கிற போட்டோகிராபர் போட்டோ எடுத்து, அதனை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

அப்போது அவரது தோற்றத்திற்காகவே ஒரே இரவில் அர்ஷத் வைரலாகியுள்ளார்.

இவர் தனக்கு கிடைத்த பெயர், புகழ் எல்லாவற்றையும் கொண்டு லண்டனில் தனக்கென்று சொந்தமான ஒரு சாய்வாலாவை தொடங்கி தற்போது தனக்கென ஒரு பிரம்மாண்டக் கடையை நிறுவி வியாபாரியாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு லண்டனில் உள்ள இல்போர்டு லேனில் தான் இவர் தனது கடையை தொடங்கி உள்ளார்.

இந்த கடை குறித்து அர்ஷத் கானிடன் தெரிவிக்கையில், “நான் லண்டனில் உள்ளவர்களுக்கு சுவையான டீயை கொடுக்க விரும்புகிறேன். தற்போது இல்போர்டு லேனில் எங்களது சர்வதேச டீ கடையை தொடங்கியுள்ளோம். இதற்கு பல தரப்பு மக்களிடம் இருந்து பேராதரவு கிடைக்கிறது” எனக் கூறியுள்ளார்.

இங்கு அதிக அளவில் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் மற்றும் பங்களாதேஷிகள் வசித்து வருகிறார்கள்.

எனவே, இவரது கடைக்கு நிச்சயம் நல்ல வரவேற்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles