NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இத்தாலி வருவோருக்கு ஒரு கோடி…

இத்தாலியின் “கால்விரல்” என வர்ணிக்கப்படும் கலாப்ரியா, கடலோர அழகு மற்றும் மலை நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்றது.

கலாப்ரியா கிராமம் சில ஆண்டுகளாக மக்கள்தொகை வீழ்ச்சி, உள்ளூர் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண கலாப்ரியா நிர்வாகம் ஒரு புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதில், இத்தாலியில் நகரத்தில் இருந்து கிராமத்தில் வசிக்க வருவோருக்கு 28 ஆயிரம் பவுண்டு (11,357,468.36 இலங்கை ரூபா) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வசிக்க வருவோர்,

  • 40 வயதுக்குள் இருக்க வேண்டும்
  • கைவிடப்பட்ட கடைகள், சிறுதொழில்களை நடத்தவோ அல்லது புதிதாக தொடங்கவோ முன் வர வேண்டும்.
  • 90 நாட்களுக்குள் குடியேற வேண்டும் என பல்வேறு நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கிராமப்பொருளாதாரம் சரிந்து வருவதை சமாளிக்க கலாப்ரியா நிர்வாகம் இது போன்ற ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles