இலங்கையில் கைதாகும் இந்திய மீனவர் விவகாரம் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக இராமேஸ்வர மீனவர்கள் சங்கம் தமிழ் FM செய்தி பிரிவுக்கு தெரிவித்தது.
குறித்த கலந்துரையாடலில், இந்திய மீனவர்கள் கைதாவதை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிப்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆக்கப்பூர்வமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், எதிர்வரும் 28ஆம் திகதி மீண்டும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் இராமேஸ்வர மீனவர்கள் சங்கம் தமிழ் FM செய்தி பிரிவுக்கு வழங்கிய விசேட செய்தியில் தெரிவித்துள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை நேற்று முன்தினம் சிறைபிடித்த சம்பவத்தை கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது