கட்டாரின் தலைநகர் தோஹாவில், டஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் (Dahra Global Technologies) எனும் நிறுவனத்தில் பணிபுரிந்த 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் கடந்த ஆண்டு கட்டார் உளவுத்துறையால் கைது செய்யப்பட்டனர்.
இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு இவர்களுக்கு கட்டார் நீதிமன்றம் தற்போது மரண தண்டனை விதித்துள்ளது.
தீர்ப்பின் முழு விவரங்களும் கிடைத்ததும் கட்டார் அதிகாரிகளுடன் இது குறித்து பேச உள்ளதாகவும் இந்த வழக்கிற்கு தீவிர முக்கியத்துவம் வழங்கியதுடன், சட்டதிட்டங்களின்படி அவர்களை வெளியே கொண்டு வருவதற்கான வழிமுறைகளை ஆராய்த்து வருவதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.