NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தியா – ஒடிசாவில் புகையிரத விபத்து – 233 பேர் பலி!

ஒடிசா மாநிலத்தில் 3 புகையிரதங்கள் அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233ஆக அதிகரித்துள்ளது.

நேற்று இரவு முதல் விடியவிடிய மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 900 பேருக்கு மேல் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

ஹெளராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு புகையிரதம், ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் தடம்புரண்டிருந்த பெங்களூரு-ஹெளரால் மீதும், நின்றுகொண்டிருந்த சரக்கு புகையிரதத்துடனும் மோதி விபத்துக்குள்ளானது. 

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் புகையிரத நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஜூன் 2 ஆம் திகதி இரவு 7.20 மணிக்கு மூன்று புகையிரதங்களின் விபத்து நேர்ந்தது.

விபத்து குறித்து தகவலறிந்ததும் தேசிய, மாநில மீட்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் உட்பட உள்ளூர் மக்களும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Share:

Related Articles