NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தியா – ரஷ்யா கூட்டணி ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முடியவில்லை : யுக்ரைன் விசனம்

இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் என்ற சூப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றன.

இது ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் சீறிப் பாயக்கூடியது. இந்த ஏவுகணை இந்தியாவில் பிரம்மோஸ் என்றும் ரஷ்யாவில் ‘பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட்’ என்றும் அழைக்கப்படுகிறது. ரஷ்யா – யுக்ரைன் இடையே 500 நாட்களுக்கும் மேலாக போர் நீடிக்கும் நிலையில் இரு நாடுகளும் அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தி வருகின்றன.

ரஷ்யாவின் கேஎச்-55, 3எம்-14 காலிபர், ஆர்-27 இசட்ஒய்பி, ஆர்கே- 55 கிரானட், ஆர்எஸ்எம்-56 புலாவா, ஆர்-29 ஆர்எம் ஸ்டில், ஆர்-29 வைசோட்டா, ஓடிஆர்-21 டோக்கா, எஸ்எஸ்-1 ஸ்குட், 3எம்-54 காலிபர் கிளப், ஆர்எஸ்டி-10 பயனீர், 9கே720 இஸ்கந்தர், ஆர்எஸ்-26 ரூபேக், ஆர்எஸ்-28 சர்மட் உள்ளிட்ட பல்வேறு வகையான ஏவுகணைகள் போரில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட யுக்ரைனுக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் அதிநவீன ஆயுதங்கள், ஏவுகணைகளை தாராளமாக வழங்கி வருகின்றன. இந்த ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவின் ஏவுகணைகளை யுக்ரைன் இராணுவம் சுட்டு வீழ்த்தி வருகிறது.

ஆனால், ரஷ்யாவின் குறிப்பிட்ட வகை ஏவுகணைகளை மட்டும் சுட்டு வீழ்த்த முடியவில்லை என்று யுக்ரைன் விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது ரஷ்யாவின் ‘பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட்’ ஏவுகணை ஆகும்.

இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணைகளை வாங்க பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

இதில் பிலிப்பைன்ஸ் அரசு ஏற்கெனவே இந்திய மதிப்பின்படி ரூ.3,103 கோடிக்கு இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles