இராமேஸ்வரம் மீனவர் படகில் இலங்கை புறாவொன்று தஞ்சமடைந்துள்ளமை தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த புறாவின் காலில் கட்டப்பட்ட வளையத்தில், சீன எழுத்துக்கள் இருந்தமையால், சீனா உளவு பார்க்க அனுப்பியதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 15ஆம் திகதி இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவரது நாட்டுப்படகில், பாம்பனில் இருந்து 13 கிலோமீற்றரில பாக் ஜலசந்தி கடலில் வானில் வட்டமடித்த புறா ஒன்று, திடீரென படகில் அமர்ந்து தஞ்சமடைந்தது.
புறாவை மீட்ட மீனவர்கள், இராமேஸ்வரத்தில் புறா வளர்க்கும் மீனவர் ஒருவரிடம் ஒப்படைத்திருந்தனர். புறாவின் காலில் உள்ள வளையத்தில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் பெயரும், அவரது அலைபேசி எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மற்றொரு காலில் சீன எழுத்துக்கள் பொறித்த ஸ்டிக்கரும், அதன் கீழே எம்.எப்.3209 எனவும் பொறிக்கப்பட்டிருந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.