NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தியாவில் வெடிகுண்டு மிரட்டல் புரளிகளால் 80 கோடி ரூபா வரை இழப்பு

இந்தியா முழுவதும் விஸ்தாரா நிறுவனத்தின் 6 விமானங்கள் உள்பட 12 விமானங்களக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, டெல்லி- பிராங்பேர்ட், சிங்கப்பூர்- மும்பை, பாலி- டெல்லி, சிங்கப்பூர்- புனே உள்ளிட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இண்டிகோ நிறுவனத்தின் புனே- ஜோத்பூர், கோவா- அகமதாபாத், கோழிக்கோடு- சவுதி உள்ளிட்ட விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெடிகுண்டு மிரட்டல் புரளிகளால் சுமார் 80 கோடி ரூபா வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நேற்று மாத்திரம் 32 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles