NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்று CS vs GA அணிகளுக்கு இடையில் போட்டி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் முக்கியமான போட்டியொன்று இன்று (15) நடைபெறவுள்ளது.

கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கும் காலி டைட்டன்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி இதுவாகும்.

இந்தப் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாஸ சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.

லங்கா பிரீமியர் லீக் போனஸ் புள்ளி பட்டியலில் கோல் டைட்டன்ஸ் அணி 6 போனஸ் புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

Share:

Related Articles