இன்றைய 28ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது.
நடப்பு தொடரில் இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத ஒரே அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியாகும். இதுவரை ஆடியுள்ள 5 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவியுள்ளது. அந்த அணியின் துடுப்பாட்டத்தில் அணித்தலைவர்; டேவிட் வார்னர் (3 அரைசதத்துடன் 228 ரன்கள்), அக்ஷர் பட்டேல் (129 ரன்கள் மற்றும் 2 விக்கெட்) மாத்திரம் பெற்றுள்ளனர்.
குறிப்பாக பிரித்வி ஷா (5 ஆட்டத்தில் 34 ரன்கள்), மிட்செல் மார்ஷ் (3 ஆட்டத்தில் 4 ரன்கள்) ஆகியோர் பின்னடைவாக உள்ளனர்.
இதேபோல் முதல் 3 ஆட்டங்களில் இரு வெற்றிகளை பெற்ற கொல்கத்தா அணி கடைசி இரு ஆட்டங்களில் முறையே ஐதராபாத், மும்பையிடம் வீழ்ந்தது. கொல்கத்தாவை பொறுத்தவரை துடுப்பாட்டத்தில் வலுவாக உள்ளது.