NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்று அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம்!

நாடளாவிய ரீதியில் இன்றையதினம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப் பகிஸ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருவதால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

அந்தவகையில், இந்த பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் இணைந்துள்ளனர்.

இதனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதேச செயலகங்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் அலுவலகங்களுக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமூகமளிக்கவில்லை.

இதனால் பிரதேச செயலகங்களில் மக்கள் சேவைகளை பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share:

Related Articles