குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக சிறுவர் தினம் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் 1954 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது.
எல்லாவற்றை விடவும் சிறுவர்கள் பெறுமதியானவர்கள் என்பதை வலியுறுத்தி இலங்கையில் இன்று சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது.
உலகிலுள்ள அனைத்து சிறுவர்களுக்கும் உள்ள அடிப்படை உரிமைகள் இந்த நாளில் நினைவுகூறப்படுகின்றது, சிறுவர் துஷ்பிரயோகம் உலகமெங்கிலும் அதிகரித்துள்ள நிலையில் இதனை இல்லாமல் ஒழிக்க பல நாடுகள் பல சட்டங்களை கொண்டுவந்தாலும் இது ஓய்ந்த பாடில்லை.
பல்வேறு செயற்பாடுகள் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறுவதால் எதிர்காலத்தில் அவர்கள் வன்முறையாளர்களாக மாறுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக உண்டு.
சிறுவர்களின் அடிப்படை உரிமையான கல்வியை அவர்கள் பெற்றுக் கொள்ளவேண்டும். பல சிறார்கள் இன்றைய நாளை சந்தோஷமாக கொண்டாடினாலும், நாம் அறியாத பல சிறு உள்ளங்கள் வேதனையிலும், சித்திரவதைகளிலும் தங்கள் காலத்தை தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
இதேவேளை, இன்று உலக முதியோர் தினமும் கொண்டாடப்படுகிறது.
முதியோர்களும் தமது காலத்தில் குழந்தைகள் சிறுவர்கள் போல் உள்ளதாலோ என்னவோ இந்த இரு தினங்களும் ஒரே நாளில் கொண்டாடப்பட்டு வருகின்றது.