NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்றைய வானிலை…!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடமத்திய மாகாணத்திலும் குருநாகல் மாவட்டத்திலும் ஓரளவு மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும்,மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடமத்திய மாகாணத்திலும் புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணிக்கு 40-45 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles