ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற மொஹமட் சிராஜ், சமிந்தா வாஸின் சாதனையை சமன் செய்து, வக்கா யூனுஸ், நிடினியை முந்தி இரட்டை சரித்திர சாதனை படைத்தார்.
நிசங்க, அசலங்க, சமரவிக்கிரம, டீ சில்வா ஆகியோரை ஒரே ஓவரில் வீழ்த்திய மொஹமட் சிராஜ் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டையும் சேர்த்து ஒரு ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சரித்திரம் படைத்தார்.
தலைவர் துன் சானக்கவையும் வீழ்த்திய அவர் தன்னுடைய முதல் 16 பந்துகளில் மொத்தம் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். 2003இல் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வாஸ் 16 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக ஒரு போட்டியில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த வீரர் என்ற பாகிஸ்தான் ஜாம்பவான் வக்கா யூனுஸின் சாதனையையும் அவர் உடைத்து புதிய சரித்திரம் படைத்தார்.
அந்த பட்டியல்:
1. மொஹமட் சிராஜ் : 6/21, 2023
2. வக்கா யூனுஸ் : 6/26, 1990
இதேவேளை ஆட்டநாயகனுக்காக வென்ற தொகையை ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்காக சமர்பித்து அனைவரது இதயங்களையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.