NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இரண்டாம் கட்ட அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு

இரண்டாம் கட்ட அஸ்வெசும கொடுப்பனவுக்கான விண்ணப்பம் கோரலில் 450,404 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இராஜாங்க நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த விண்ணப்பங்களில் 84 சதவீதமானவை தற்போது வரை கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு புதிதாக நியமனம் பெற்றுள்ள 2000 கிராம அலுவலர்களை அஸ்வெசும கொடுப்பனவு செயற்பாட்டில் இணைத்துக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அஸ்வெசும விண்ணப்பங்களை பரிசீலிப்பது, கணனி வலையமைப்பில் தரவேற்றுவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள மூன்றாம் தரப்பினருக்கான கொடுப்பனவு தொடர்பில் அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share:

Related Articles