NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இராணுவத்திற்கு கிடைக்கும் மரியாதை தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிடைக்க வேண்டும் – வடிவேல் சுரேஷ் பிரதீஷ்

லிந்துலை லிப்பக்கலை பகுதியில் (24) மாலை தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது தொழிலாளர்களுடன் இணைந்து கொழுந்து பறித்து கொண்டு பொது மக்களுடன் வடிவேல் சுரேஷ் பிரதீஷ் கலந்துரையாடினார்.

இதன் போது தொடர்ந்து  உரையாற்றிய வடிவேல் சுரேஷ் பிரதீஷ் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை முக்கியமானது ஆனால் நான் பாராளுமன்றத்திற்கு செல்லாமல் வீட்டிலிருந்து கதைத்து தீர்த்து வைக்க முடியாது அதேபோல் மலையகத்திலிருந்து ஏராளமான இளைஞர் யுவதிகள் கொழும்பில் தொழில் புரிந்து வருகின்றன ஆனால் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு இல்லை, முன்னைய காலத்தில் இரவு நேர பாடசாலைகள் அதிகமாக இடம்பெற்றது ஆனால் அது தற்போது முற்றாக இல்லாமல் போய்விட்டது இதனால் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது காலம் காலமாக கஷ்டப்படும் தோட்டத் தொழிலாளர்களை எவரும் கண்டு கொள்வதில்லை அதேபோல் சிறு துளி மரியாதை கூட அவர்களுக்கு கிடைப்பதில்லை இவை அனைத்தும் எதிர்காலத்தில் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்றால் உங்கள் பெருமதி மிக்க வாக்குகளால் என்னை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு நான் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று நாடாளுமன்றம் சென்றால் கட்டாயமாக  இராணுவத்திற்கு கிடைக்கும் மரியாதை தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிடைக்கச் செய்வேன்.

தொடர்ந்து வடிவேல் சுரேஷ் பிரதீஷ் இளைஞர் யுவதிகள் அவர்களுடைய அடிப்படை பிரச்சனைகள், மகளிர் மற்றும் தோட்டத்தொழிலாளர்கள் அவர்களின் அடிப்படை வாழ்க்கை பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகளையும் பொதுவான அவருடைய கொள்கைகள் பற்றியும் மக்களுடன் கலந்துரையாடி தெளிவுப்படுத்தினார்.

Share:

Related Articles