பிரான்ஸ் சுற்றுலா பயணிகள் குழுவொன்று நேற்று முன்தினம் இரவு மிகிந்தலை விகாரையை சென்றடைந்துள்ளனர்.
மிகிந்தலை புனித தலத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை அறியாமல் நேற்றிரவு முன்தினம் மிகிந்தலை வழிபட சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர்.
பிரான்ஸ் பிரஜைகள் உட்பட சுமார் 50 பேர் கொண்ட வெளிநாட்டினர் தீப்பந்தங்களுடன் மிகிந்தலை மலையில் ஏறியுள்ளனர்.
41 இலட்சம் மின்கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் மிஹிந்தலை விகாரையின் மின்சாரத்தை இலங்கை மின்சார சபை துண்டித்துள்ளது.
விகாரையை அதனை அண்மித்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமையினால் சுற்றுலாப் பயணிகள் மிகிந்தலை தீபங்களை ஏற்றிக்கொண்டு கடக்க வேண்டியிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் மிகிந்தலை விகாரையின் மின் பட்டியலை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.