NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இறுதிப்பந்தில் த்ரில் வெற்றி ; இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது Jaffna Kings

நடப்பு எல்.பி.எல் தொடரின் குவாலிபயர் 2 போட்டியில் நடப்பு சம்பியன் கண்டி பெல்கன்ஸ் அணியை ஒரு ஓட்டத்தால் வீழ்த்திய ஜவ்னா கிங்ஸ் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அதன் படி நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் கோல் மார்வல்ஸ் – ஜவ்னா கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஜவ்னா கிங்ஸ் மற்றும் கண்டி பெல்கன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று கொழும்பு ஆர்.பி.எஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஜவ்னா கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ஓட்டங்களை குவித்தது. 

அதன் அடிப்படையில் கண்டி அணியின் வெற்றி இலக்காக 188 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. 

இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய கண்டி அணியினால் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது. இதனால் 1 ஓட்டத்தினால் ஜவ்னா கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

ஜவ்னா அணியின் துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் சதம் கடந்து ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles