இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியாகியுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்டுள்ளார்.
வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரங்கள், பணிகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றுவதற்காக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரால் இடைக்கால குழு அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த நவம்பர் 5ஆம் திகதி அவரால் வெளியிடப்பட்ட 2356/43 இலக்க வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இவ் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட இடைக்கால குழு கலைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.