யோ. தர்மராஜ்
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமை குறித்து கடுமையான தீர்மானத்தை எடுக்குமாறு இலங்கை கிரிக்கெட் சபையே ஐசிசியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக விளையாட்டுக்கான பிரபல cricinfo இணையத்தளம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அந்த இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில்………
இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளதாக ஐசிசி அறிவிருத்திருந்தாலும் அதில் இலங்கை கிரிக்கெட் சபை ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
குறிப்பாக, இலங்கை கிரிக்கெட்டின் ஐசிசி உறுப்புரிமை குறித்து கடுமையான தீர்மானத்தை எடுக்குமாறு இலங்கை கிரிக்கெட் சபையே கோரிக்கை விடுத்துள்ளதாகcricinfo இணையத்தளம் தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கை கிரிக்கெட் பிரதிநிதிகளை பார்வையாளராக பங்கேற்க ஐசிசி அனுமதித்துள்ளதால், அகமதாபாத்தில் நடைபெறும் ஐசிசி கூட்டங்களில் ஷம்மி சில்வா பங்கேற்க வாய்ப்புள்ளதாக அந்த இணையதளம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது இந்தியா சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா, இலங்கை கிரிக்கெட் சபையினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியாக ஐசிசியால் தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ளப்படுவார் எனவும் தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையின் உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு சர்வதேச கிரிக்கட் பேரவை நேற்று அறிவித்திருந்த நிலையிலேயே cricinfo இணையத்தளம் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.