NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை சுப்பர் 6 சுற்றின் 2ஆவது போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது!

ஸிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் ICC உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் வெற்றிநடை போட்டுவந்த முன்னாள் உலக சம்பியன் இலங்கை, தனது உலகக் கிண்ண வாய்ப்பை அதிகரித்துக்கொள்ளும் குறிக்கோளுடன் சுப்பர் 6 சுற்றின் 2ஆவது போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.

புலாவாயோ ஸ்போர்ட்ஸ் கிளப் விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

தனது குழுவிலிருந்து சுப்பர் 6க்கு முன்னேறிய ஸ்கொட்லாந்து, ஓமான் ஆகிய அணிகளை வெற்றிகொண்டதன் மூலம் 4 புள்ளிகளுடன் சுப்பர் 6 சுற்றுக்குள் நுழைந்துள்ள இலங்கைக்கு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியைப் பெற இன்னும் 2 வெற்றிகளே தேவைப்படுகிறது.

அந்த இரண்டில் ஒரு வெற்றியை இன்றைய போட்டியில் பெற முடியும் என்ற நம்பிக்கையில் இலங்கை களம் இறங்கவுள்ளது.

Share:

Related Articles