இலங்கையின் துறைமுகம் தொடர்பான முதலீடுகளில் ஈடுபட நெதர்லாந்து அரசாங்கம் தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி அநுர குமார திசாநாயக மற்றும் நெதர்லாந்து தூதராணா எச்.இ. போனி ஹோர்பாச் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது.
இந்த கலந்துரையாடலின் போது, இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் பரஸ்பர உறவுகளை வலுப்படுத்தல், இலங்கையில் சுற றுலா, துறைமுக நடவடிக்கைகளை மேற்ம்படுத்தல் மற்றும் டச்சு அரசாங்கம் வழங்கக்கூடிய சாத்தியமான ஆதரவு குறித்தும் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.