NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் யானை சின்னத்தில் போட்டியிடத் தீர்மானம்!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி இராமேஸ்வரன், தேசிய அமைப்பாளர் சக்திவேல் ஆகியோர் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர்.

எனவே பாராளுமன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, மலையகத்தின் மாபெரும் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எந்த கூட்டணியில் மற்றும் எந்த சின்னத்தில், எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர் என பல்வேறு தரப்பினரால் கருத்தாடல்கள் இடம்பெற்று வந்த நிலையில், நேற்று அதன் இறுதி முடிவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்பீடம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles