NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை பிரஜை உட்பட 4 பேர் தமிழக பொலிஸாரால் கைது!

சட்டவிரோத பணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சுமார் ஒரு கோடி இந்திய ரூபாய் பணத்துடன் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை பிரஜை உட்பட 4 பேரை தமிழகம் சென்னை மாநகர பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை எம்.ஜி.ஆர் நகர் பொலிஸ் நிலைய அதிகாரிகள், வான் ஒன்றுக்குள் இருந்த 4 பேரை விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த வான் வண்டியை சோதனை செய்ததில், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய ரூபாய் தாள்கள் அடங்கிய பணத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் அந்த பணத்துக்கான முறையான ஆவணங்கள் எதுவும் இருக்கவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதற்கமைய குறித்த நான்கு பேருடன், கைப்பற்றப்பட்ட பணம் கே.கே.நகர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles