இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் எதிர்காலத்தில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இலங்கை மற்றும் இந்திய ரூபாக்களை பயன்படுத்துவது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையில் பேச்சு வார்த்தைகள் நடாத்தப்பட்டுள்ளன.
இந்தியாவுக்கு மூன்று நாள் அரசுமுறை பயணமாக சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று பிரதமர் மோடியை ஹைதரபாத் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது இருவரும் எதிர்காலத்தில் இருநாடுகளுக்கும் இடையில் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போது இருநாட்டு நாணயங்களையும் பயன்படுத்துவது குறித்து ஆலோசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் பற்றிய விவாதங்களைத் தொடரவும், இலங்கையின் முக்கிய துறைகளில் முதலீடுகளை ஊக்குவித்து அதன் ஏற்றுமதி திறனை மேம்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.