இலங்கை மின்சார சபைக்கு 1,110 மெகாவோட் மின்சாரத்தை சேர்க்கும் வகையில் 6 பாரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
அத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த அவர், இம்மாத இறுதிக்குள் சுற்றுச் சூழல், காணி மற்றும் ஏனைய அனுமதிகளுக்கு உட்பட்டு அந்த திட்டங்களுக்கு மின்சாரம் கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
இக்கலந்துரையாடலில் இலங்கை மின்சார சபை மற்றும் சூரிய சக்தி அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.