NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் – ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாட போவதில்லையா?

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடப் போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மாத இறுதியில் இந்திய அணி இலங்கை அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 T20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. T20 உலகக் கிண்ண வெற்றிக்குப் பிறகு சர்வதேச T20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் அணியுடன் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

செப்டம்பர் மற்றும் ஜனவரி மாத இடைவெளியில் இந்திய அணி பங்களாதேசுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள், நியூசிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படும் பட்சத்தில், இந்திய அணியை ஹார்திக் பாண்டியா அல்லது கே.எல்.ராகுல் கெப்டனாக வழிநடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

Related Articles