(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் இலங்கைக்கான துருக்கிய தூதுவருக்கும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் இடையில் நேற்று (31) இடம்பெற்றது.
துருக்கி ஏர்லைன்ஸ் இலங்கைக்கு விமானப் பயணத்தை மேற்கொண்டாலும் அது மாலைதீவு ஊடாகவே பயணிப்பதால், துருக்கிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரும்போது மேலதிகமாக ஒன்றரை மணிநேரத்தை பயணத்தில் செலவிட வேண்டியுள்ளது.
அத்தகைய சிரமங்களை குறைப்பதற்காகவே இந்த புதிய சேவை, ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதற்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.