NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையர்களின் இதயங்களை வென்றுள்ள Bajaj Discover 125 அறிமுகமானது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

வாகன உற்பத்தி மற்றும் ஒருங்கு சேர்த்தல் தொழில்துறை மற்றும் வாகன உதிரிப்பாக உற்பத்தித் தொழில்துறைக்கு கைத்தொழில் அமைச்சினால் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையான செயற்பாட்டு நடைமுறையின் கீழ் உள்நாட்டில் பெறுமதி சேர்த்தல் திட்டத்திற்கு அமையத் தயாரிக்கப்பட்ட புத்தம் புதிய பஜாஜ் டிஸ்கவர் 125 மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்தியிருப்பதாக டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிறைவட்) லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அரை மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களின் இதயங்களை வென்றுள்ள பஜாஜ் டிஸ்கவர் 125 மோட்டார் சைக்கிளானது, 125CC வகையில் சிறந்த செயல்திறன் மற்றும் வினைத்திறன் கொண்ட எரிபொருள் பயன்பாடு என்பவற்றுடன் நிரூபிக்கப்பட்ட சாதனையைப் பதிவு செய்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட Discover 125 மோட்டார் சைக்கிள் பல்வேறு முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

அதில், சறுக்கலுக்கு இடமளிக்காத பிறேக் பிடிக்கும் போது வாகனத்தின் சமநிலையைப் பேணக்கூடிய பிறேக் கட்டமைப்பு, சிறந்த சவாரி அனுபவம் மற்றும் சிறந்த இருக்கைக்கான பிடிப்பை வழங்கும் மென்மையான மெத்தையுடன் கூடிய இருக்கை, 05-வேக கியர் அமைப்புடன் கூடிய டிஜிட்டல் கியர் இன்டிக்கேட்டர், DRL ஹெட்லைட், டியூப்லஸ் டயர் போன்றவை உள்ளடங்குகின்றன.

மோட்டார் சைக்கிளானது தற்பொழுது மூன்று கவர்ச்சியான நிறங்களில் (நீலம், சிவப்பு மற்றும் பச்சை) கிடைக்கின்றன.

அலோய் வீல்களும் அவற்றுக்குப் பொருத்தமான நிற ஸ்டிக்கர்களும் வாகனத்துக்கு மேலும் கவர்ச்சியைக் கொடுக்கின்றன.

அறிமுகம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த நிறுவனத்தின் பொது முகாமையாளர் (வாகன விற்பனை) திரு.லக்மல் த சில்வா குறிப்பிடுகையில், ‘வாடிக்கையாளர்களுக்குப் புத்தம் புதிய வாகனங்களைக் கிடைக்கச் செய்யும் அதேநேரம், நிலையான செயற்பாட்டு நடைமுறையினை அறிமுகப்படுத்தி தொழில்துறையைப் பாதுகாப்பதற்கு கைத்தொழில் அமைச்சு எடுத்த முயற்சிகளுக்காக அரசாங்கத்துக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

ஏனைய பஜாஜ் மோட்டார் சைக்கிள்களிலும் இதனை நாம் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கின்றோம்’ என்றார்.

இந்தப் புதிய மோட்டார் சைக்கிளானது DPMC காட்சியறைகள் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள முகவர்களிடம் கிடைக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இறக்குமதிக் கட்டுப்பாடுகள் காரணமாக மூன்று வருட இடைவெளியின் பின்னர் 2022ஆம் ஆண்டு நிறுவனம் புத்தம் புதிய பஜாஜ் CT 100 மற்றும் பஜாஜ் Discover 125 மோட்டார் சைக்கிள்களை நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஹம்பாந்தோட்டையின் ரன்ன தொழிற்சாலையில் பொருத்தத் தொடங்கியது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உதிரிப்பாகங்களுடன் இவை தயாரிக்கப்பட்டு பஜாஜ் நிறுவனத்தினால் பரிசோதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

பஜாஜ் டிஸ்கவர் 125 தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள 0114700600 என்ற இலக்கத்துக்கு அழைக்கவும்.

Share:

Related Articles