இந்த ஆண்டு இலங்கை முன்வைத்த 2.2 சதவீத மிதமான பொருளாதார விரிவாக்கமானது மீட்சிக்கான அறிகுறிகளை காண்பித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
‘உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது ஜனவரியில் இருந்து அவதானத்துக்கு உட்படுத்தப்பட்டது. ஜனவரி 2.2 சதவீதம் என்ற மிதமான பொருளாதார விரிவாக்கமானது 0.5 சதவீதம் அதிகரித்து, நேர்மறையான மாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.
சுற்றுலா மற்றும் பணம் அனுப்புவதில் படிப்படியாக மீண்டு வருவதே இந்த முன்னேற்றத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.
இந்நிலைமையானது எதிர்வரும் ஆண்டுகளில் இலங்கை பொருளாதார ரீதியான தனது வளர்ச்சியை முன்னறிவிப்பதாக உள்ளது.
இலங்கை எதிர்வரும் 2026ஆம் ஆண்டளவில் 3 சதவீதமான பொருளாதார வளர்ச்சியைத் தொடும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,இந்த நம்பிக்கையான கண்ணோட்டம் வெற்றிகரமான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை செயற்படுத்துவதைச் சார்ந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.