NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையிலிருந்து ஐந்து  பேர் அகதிகளாக இந்தியாவில் அடைக்கலம்!

இலங்கையிலிருந்து ஐந்து  பேர் அகதிகளாக இந்தியாவில் அடைக்கலம் கோரியுள்ளதாகத் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மன்னார் தாழ்வுபாடு பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5பேர் கடந்த ஐந்தாம் திகதி இரவு 9.00 மணிக்கு தாழ்வுபாடு பகுதியில் இருந்து படகு மூலம் இந்தியா நோக்கி புறப்பட்டு அன்றையதினம் இரவு 11.30 மணிக்கு தனுஷ்கோடி 4வது  மணல் தீடையில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்களை மீட்க யாரும் வராததால் நேற்றையதினம்(06) மீண்டும் இலங்கை படகு மூலம் மேற்படி நபர்கள் தனுஷ்கோடி முதல் தீடையில் இறக்கியுள்ளனர்.

அவர்களை தற்போது  இராமேஸ்வரம் மெரைன் பொலிஸார்  Rmm மரைன் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் தாழ்வுபாடு பகுதியை சேர்ந்த  தாய், தந்தை மற்றும் அவர்களது மூன்று பிள்ளைகளுமே இவ்வாறு  தனுஷ்கோடியில் தரையிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles