NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையில் எயிட்ஸ் நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் இவ்வாண்டுக்கான முதல் காலாண்டில் மாத்திரம் 200க்கும் மேற்பட்ட புதிய எச்.ஐ.வி/எயிட்ஸ் நோயாளிகள் பதிவாகியுள்ள நிலையில் 13 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டத்தின்படி, 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அதாவது ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை இலங்கையில் 207 எச்.ஐ.வி/எயிட்ஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

இது 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 25 வீத அதிகரிப்பை காட்டுகிறது.

2024ஆம் ஆண்டு முதல் காலாண்டில் பதிவான முறைப்பாடுகளில் , 23 ஆண்களும் ஐந்து பெண்களும் 15-24 வயதுக்கு உட்பட்டவர்கள், மீதமுள்ள முறைப்பாடுகள் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

அதன்படி, 2024ஆம் ஆண்டில் பதிவாகியுள்ள எச்.ஐ.வி நோயாளர்களின் ஆண்-பெண் விகிதம் 7:1 ஆக உள்ளது.

மேலும், மேற்படி காலப்பகுதியில் மொத்தம் 13 எச்ஐவி/எய்ட்ஸ் தொடர்பான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

2023ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் அதாவது ஒக்டோபர்-டிசம்பர் மாதம் வரை 2009ஆம் ஆண்டிலிருந்து ஒரு காலாண்டில் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் (209) பதிவாகியுள்ளனர்.

இதற்கிடையில், 2023ஆம் ஆண்டில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்பான 43 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இதேவெளை, 2018ஆம் ஆண்டிலிருந்து எச்.ஐ.வி நோயாளிகளின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை தொடர்ந்து அவதானித்து வருவதாக வைத்தியர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்தார்.

இவ்வாறு நோயாளிகள் அதிகரிப்பதற்கான காரணம் பரிசோதனை திறன் விரிவாக்கம், பாலியல் கல்வி மற்றும் ஆபத்தான பாலுறவு நடத்தை குறித்து மக்களிடையே உள்ள மோசமான அறிவு மற்றும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காதது என வைத்தியர் மேலும் தெரிவித்தார்.

Share:

Related Articles