NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையில் ஓய்வூதியம் வழங்குவதில் நெருக்கடி!

2028 அல்லது 2030ஆம் ஆண்டுக்குள் ஓய்வூதியம் வழங்குவதில் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும் என ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஓய்வூதியத் திணைக்கள அதிகாரிகளுடன் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் இந்தத் தகவல் தெரியவந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் ஓய்வூதியம் வழங்குவதில் நெருக்கடி ஏற்படுமா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த அதிகாரிகள், ‘ஆம் நிச்சயமாக ஏற்படும். எங்களது கணக்கீடுகளின்படி, 2028 – 2030க்குள் நாடு மீண்டும் ஓய்வூதியம் வழங்குவதில் நெருக்கடியை சந்திக்கும்.

ஏற்கனவே 7 இலட்சம் ஓய்வூதியம் பெறுவோர் உள்ளனர். அவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் செலுத்த சுமார் 27 பில்லியன் தேவைப்படுகிறது’ என குறிப்பிட்டுள்ளனர்.

Share:

Related Articles