NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையில் தமிழர் மீதான இனவழிப்பு-சாடும் பிரித்தானிய தேர்தல் வேட்பாளரான ஈழத் தமிழ் பெண்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றதாக பிரித்தானிய தேர்தலில் போட்டியிடும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஈழத் தமிழ் பெண் உமா குமரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

பிரித்தானியாவில் இடம்பெறும் பொதுத்தேர்தலில் ஆட்சியமைக்கலாம் என பலமாக நம்பப்படும் தொழிற்கட்சியானது தேர்தலில் ஈழத்தமிழ் பூர்வீகத்தை சேர்ந்த இரண்டு பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது. அந்தவகையில், பிரித்தானியாவின் லண்டனின் புறநகர்ப் பகுதியான ஸ்டார்ட்போர்ட் மற்றும் போவ் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக உமா குமரன் போட்டியிடுகின்றார்.

தமது பெற்றோர் இலங்கையிலிருந்து ஏதிலிகளாக பிரித்தானியா வருகை தந்தவர்கள் எனவும், இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.போரினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தாம் நன்றாக உணர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் பாலஸ்தீன போர் தொடர்பில் கருத்து வெளியிடும் போது தாய்நாட்டில் தமது சமூகம் அனுபவித்த நெருக்கடிகள் குறித்தும் விபரித்துள்ளார்.காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் நடைமுறைபடுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles