(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இந்த வருடத்தின் கடந்த நான்கு மாதங்களில் இலங்கைக்கு வருகைத்தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் 113 பேர் இலங்கையில் தாங்கள் அனுபவித்த பாலியல் வன்கொடுமைகள், கொள்ளைகள், திருட்டுகள், தாக்குதல்கள் மற்றும் மோசடிகள் குறித்து பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் தென் மாகாணத்தில் இந்த அனுபவங்களை எதிர்கொண்டவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதில், 65 முறைப்பாடுகள் திருட்டு மற்றும் கொள்ளை தொடர்பானவை என்பதுடன், அவர்களில் பாதிக்கப்பட்ட 20 பேர் ஐரோப்பிய குடிமக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனையவர்களில் 21 பேர் ரஷ்யர்களும் 6 அமெரிக்கர்களும் உள்ளடங்குகின்றனர்.
இந்த 4 மாதங்களில் 13 வெளிநாட்டு பெண்கள் மற்றும் இளம் பெண்கள் இலங்கையர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் 9 பேர் ஐரோப்பிய பெண்களாவர். மேலும் 13 வெளிநாட்டவர்கள் தாக்குதல்கள், காயங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து புகார் அளித்துள்ளனர்.