NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையில் முதன்முறையாக வத்தளை Pegasus Reef கடற்கரையை அலங்கரிக்கவுள்ள Battle of the Reef!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “Battle of the Reef” திருவிழா எதிர்வரும் ஜூலை மாதம் Pegasus Reef ஹோட்டல் கடற்கரையில் இடம்பெறவுள்ளது.

இந்த ஆரம்ப நிகழ்வானது, இலங்கையில் உள்ள நிறுவன பங்கேற்பாளர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட விளையாட்டுகள், நட்புறவு, பொழுதுபோக்கு உள்ளிட்ட மகிழ்ச்சியூட்டும் கொண்டாட்ட நிகழ்வுகளை உறுதியளிக்கிறது.

ஜூலை 27 ஆம் திகதி, Pegasus Reef ஹோட்டலின் அழகிய கடற்கரையானது விழாக் கோலம் பூண்டு, உற்சாகத்துடனும், நட்பு ரீதியான போட்டிகளின் ஆரவாரத்துடன் உயிர் பெறவுள்ளது. இலங்கையில் உள்ள பெரு நிறுவனங்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பீச் வொலிபால், Tag Rugby, கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகளும் வேடிக்கை நிறைந்த பல்வேறு செயற்பாடுகளும் இதில் உள்ளடங்குகின்றன.

Pegasus Reef நிறுவனத்தின் பொது முகாமையாளர் ரேணுகே கொஸ்வத்த இது தொடர்பில் குறிப்பிடுகையில், “விளையாட்டுகள் மற்றும் இசை நிறைந்த கொண்டாட்டமான ‘Battle of the Reef’  விழாவை, Pegasus Reef ஹோட்டலில் நடாத்துவதில் நாம் பெருமிதம் அடைகிறோம். இது இலங்கையில் இடம்பெறும் இவ்வாறான “முதலாவது” நிகழ்வாகும். இந்த நிகழ்வின் முக்கிய விடயமாக வேடிக்கை விநோத அம்சங்கள் அமைந்திருக்கும்.” என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த ஆரம்ப நிகழ்வானது, எமது அழகிய கடற்கரைப் பின்னணியில், குழுவாக ஒன்றிணையும் உணர்வைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட, பல்வேறுபட்ட அனுபவத்தை வழங்குவதற்காக ஒழுங்கு செய்ய்பபட்டுள்ளது. ஒரு தனித்துவமான தளத்தை வழங்கும் இந்நிகழ்வானது, தமக்குள் இருக்கும் தடகள வீரனை வெளிக் கொண்டுவருவதோடு மட்டுமல்லாமல், தோழமை மற்றும் குழுப்பணியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.” என்றார்.

இந்த திருவிழாவானது, கடற்கரையோர பொழுதுபோக்கையும், ஓய்வான ஒரு நாளையும் உறுதியளிப்பதோடு, பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை உறுதி செய்கிறது. காரணம், ஈர்க்கக் கூடிய பல்வேறு செயற்பாடுகள் மற்றும் உற்சாகமான போட்டிகள் மூலம் ஏற்படும் தோழமையை அவர்கள் இங்கு அனுபவிக்க முடியும்.

Team Lead Events முகாமையாளர் திமித்ர சில்வா இது பற்றித் தெரிவிக்கையில், “Battle of the Reef ஆனது பெருநிறுவன அனுசரணையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட, பிரத்தியேகமான வர்த்தகநாம பிரபலப்படுத்தல் நிகழ்வாகவும், தம்மை அடையாளப்படுத்தும் வாய்ப்புகளைக் கொண்டதாகவும் அமைகிறது. அத்துடன் இது இலங்கையின் பெரு நிறுவன சமூகத்திற்குள் வர்த்தகநாம ஊக்குவிப்பு மற்றும் நட்புறவு வலையமைப்பை ஏற்படுத்துவதற்கான முதன்மையான நிகழ்வாக அமைகிறது. எதிர்வரும் வருடங்களில் நிறுவனங்களின் நாட்காட்டியில், கட்டாயம் கலந்துகொள்ள வேண்டிய ஒரு நிகழ்வாக இது இடம்பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.” என்றார்.

இந்த உற்சாகத்துடன், பிரபலமான கலைஞர்கள் மற்றும் இசைக்குழுக்களைக் கொண்ட ஒரு விறுவிறுப்பான நேரடி இசை நிகழ்ச்சியையும் அது கொண்டுள்ளது. Pegasus Reef ஹோட்டல் கடற்கரையில் அதிக உற்சாகத்தையும், மறக்க முடியாத நினைவுகள் நிறைந்த ஒரு நாளையும் இந்த நிகழ்வுகள் யாவும் உருவாக்கும் என்பது உறுதி.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles