NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையில் வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் அறிமுகம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலங்கையில் வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு தகுதியானவர்களை உடன் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.

இந்தத் திட்டம் தகுதியுள்ள மாணவர்களுக்கு வட்டியில்லா நிதி உதவியைப் பெறுவதற்கு வாய்ப்பை வழங்குகிறது.

இந்த நிலையில் ஓகஸ்ட் 7ஆம் திகதிக்குள் தகுதியுள்ள அனைவரையும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்குமாறு அமைச்சு அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.

Share:

Related Articles